Tamil
Tamil
PROGRAMMES OVERVIEW:
-
MTL Fortnight
-
Hosting of Overseas Partners / Schools
-
eOverseas Immersion Trip
-
Talent Development
-
Conversational Chinese Malay (CCM)
-
Reading & Writing Programme
-
Parents’ Talk
-
Post Exam Activities
தாய்மொழி இருவார விழா
வகுப்பறை நடவடிக்கை
தொடக்கநிலை 1 முதல் தொடக்கநிலை 6 வரையிலான மாணவர்களுக்கு பருவம் 3ல் தாய்மொழி இருவார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தொடக்கநிலை 1 முதல் தொடக்கநிலை 6 வரை பயிலும் அனைத்துதமிழ் மாணவர்கள் மற்றும் பிற இந்திய மொழி மாணவர்களுக்கான நடவடிக்கைகள் அவரவர்களின் நிலைக்கேற்ப மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் மூலம் நமது மாணவர்கள் தமிழர்களின் கைவினைப் பொருட்கள் பற்றியும் அவற்றை செய்யும் விதம் பற்றியும் அறிந்துகொண்டனர். அதுமட்டுமின்றி, அவற்றை எவ்வாறு மிகவும் எளிமையாக செய்யலாம் என்பதையும் கற்றுக்கொண்டனர். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதால் மாணவர்கள் வகுப்பறையில் மட்டுமல்லாமல் வகுப்பறை தாண்டிய கற்றலில் ஈடுபடுவதுடன் அதில் முழுமையான ஆர்வத்தையும் வெளிப்படுத்தித் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
முகாம் வகுப்பு நடவடிக்கை
தொடக்கநிலை 4 தமிழ் மற்றும் பிற இந்திய மொழி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்கை தாய்மொழி இருவார நடவடிக்கையின் ஒரு பிரிவாக இருந்தது. இதில் மாணவர்கள் அகல்விளக்கை ஏன் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக இந்துக்களின் வீடுகளில் பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொண்டனர். இந்த வகுப்பில் மாணவர்கள் அவ்விளக்கிற்கு எப்படி வண்ணம் தீட்டுவது என்பதை கற்றுக்கொண்டு அதையே நடவடிக்கையாகவும் மேற்கொண்டனர். மேலும் கோலம் போட்டு அதற்கு வண்ணம் தீட்டும் கலையையும் மாணவர்கள் வெளிப்படுத்தினர். இத்தகைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினர்.
PSLE Briefing for Parents
PSLE briefing for P6 students was conducted on March 3rd our school. Only the parents of P6 students participated in this briefing. In this event, the parents were educated on how the PSLE test papers have been prepared, how were the marks allocated to each question and also how to attend the questions. Parents were given information on all four papers inclusive of Composition, Listening Comprehension & Oral. On top of this parents were also encouraged to shoot out their questions to clarify their doubts.
As a result of this briefing, all the parents of P6 students were benefited with the essential information they need.
நமது பள்ளியில் தொடக்கநிலை 6ல் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான தொடக்கப்பள்ளி இறுதித்தேர்விற்கான விளக்கக்கூட்டம் மார்ச்சு 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் தொடக்கநிலை 6 மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவ்விளக்கக் கூட்டத்தில் தொடக்கப்பள்ளியின் இறுதித் தேர்வு முறையின் அமைப்பு பற்றியும் வினாக்களின் அமைப்பு முறை பற்றியும் அதற்கென வழங்கப்படும் மதிப்பெண்களின் விவரங்களும் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு விடை எழுதும் விதம் பற்றிய குறிப்புகளும் கூடுதலாக வழங்கப்பட்டன. கட்டுரை, மொழிப்பயன்பாடு, கேட்டல் கருத்தறிதல் மற்றும் வாய்மொழித்தேர்வு ஆகியன பற்றிய அனைத்து தகவல்களும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. இறுதியில் பெற்றோர்களின் சந்தேகங்களுக்குரிய விளக்கங்களும் தரப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதன்மூலம் தொடக்கநிலை 6 மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் பயனடைந்துள்ளனர்.
P5 Parents Workshop
A workshop was arranged for the Parents of P5 students. Parents were informed about the test papers which the P5 students are going to take. Parents were educated on how to write a proper compo by bringing out your points/views & they were also told about the marks allocated for the compo in paper 1, they were also explained about the students of paper 2 and the new changes which has been introduced in the oral examination. They were also provided with the information on how will the oral examination conversation happens. This workshop was really benefited for the parents to train up their kids.
தொடக்கநிலை 5ல் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான பயிலரங்கு மார்ச்சு 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் தொடக்கநிலை 5ல், மாணவர்கள் எழுதப்போகும் தேர்வுத்தாள்கள் கொண்ட முழு விவரங்களும் கூறப்பட்டன. கட்டுரையில் மாணவர்கள் எப்படி தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றிய தகவல்களும் அதற்குரிய மதிப்பெண்களின் விவரங்களும் அளிக்கப்பட்டன. தாள் 2ல் மொழிப்பயன்பாடும் கருத்தறிதலும் பற்றிய அமைப்புமுறை, அதன் மதிப்பெண்களின் விவரங்கள் ஆகியனவும் கூறப்பட்டன. மேலும், கூடுதல் தகவலாக வாய்மொழித்தேர்வில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர், மாணவர்களுக்கிடையேயான கருத்துரையாடல் எவ்வாறு நிகழ வேண்டும் என்றும் விளக்கம் தரப்பட்டது. பெற்றோர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டதன்மூலம் தங்கள் பிள்ளைகளைத் தேர்வுக்குத் தயார்படுத்தும் முறை பற்றி அறிந்துகொண்டனர் எனலாம்.
Book Fair
This year our school organized book fair for all Mother Tongue on behalf of Tamil. Raji publication organized a book fair on March 23/2018. P1 – P6 pupils bought their books with the help of their MT Teacher. They can choose their books. For Eg. Moral story books, Thirukkural, Tamil Dictionary =, worksheets, model question papers, workbooks. Which are related to their language development. Parents are not allowed in this event. So, book list were given to the parents can mark for their parents and they can children buy easily. The purpose of this event was to improve the students Mother Tongue language ability. This event was benefited all kind of students.
இந்த வருடம் நமது பள்ளியில் தாய்மொழிப் பிரிவில் ஒன்றான தமிழ்மொழியின் சார்பாக புத்தகக் கண்காட்சி ஒன்று மார்ச்சு 23ஆம் தேதி நடைபெற்றது. இதை ராஜி பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தார் மேற்கொண்டனர். இதில் தொடக்கநிலை 1 முதல் தொடக்கநிலை 6 வரை பயிலும் மாணவர்களுக்குத் தேவையான கதைப்புத்தகங்கள், பயிற்சித்தாள்கள், மொழிவளம் தொடர்பான பயிற்சிநூல், மாதிரித்தேர்வுத் தாள்கள் ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்டன. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை அவரவர்களின் தமிழ்மொழி ஆசிரியரின் உதவியுடன் வந்து வாங்கிச்சென்றனர். இதில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர். அவர்கள், தங்களின் பெற்றோரின் அறிவுரையின்படி தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக்கொண்டனர். மாணவர்களின் மொழி அறிவை மேம்படுத்துவதற்காக இந்தப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. மேலும், இது மாணவர்களுக்குப் பயனுள்ள விதமாகவும் அமைந்திருந்தது.